Subscribe:

நேரத்தைச் சிக்கனமாகச் சேமிக்கச் சில வழிகள்

கடந்து செல்லும் ஒவ்வொரு கணமும் திரும்பக் கிடைக்காதது.

ஒவ்நேவொரு நிமிடமும் சிறியதாகத் தெரிந்தாலும் அவற்றை முறையாகப் பயன்படுத்தினால் பெரிய மாற்றத்தைக் காணலாம்.

நாங்கள் தடுமாறும் தருணங்களால் செலவிடும் நேரத்தின் அளவை கணக்கிட முடிந்தால்  நாங்கள் இழந்தது பெரிதாகத் தெரியும்.

திறமையாகக் கையாளத் தெரிந்தால் அட்டகாசமான அதிரடித் திருப்பங்களை வாழக்கையில் காணலாம்.

இதோ உங்களுக்காகச் சில யோசனைகள்.

1. இரண்டு மனம் வேண்டும் என்பதுபோலச் சில சந்தர்ப்பங்களில் தோன்றலாம். இரண்டில் எதைத் தெரிவு செய்வது என்ற குழப்பம் வரும்போது நாணயத்தைச் சுழற்றுங்கள்    பூவா தலையா போட்டுப் பாருங்கள். முக்கிய முடிவு எடுக்கும் தலைவலி இல்லை.






2. மேடையில் பேசவேண்டி ஏற்படும்போது....

எல்லோருக்கும் மேடைப்பேச்சு கைவந்த கலையாக அமைவதில்லை.ஆனாலும் மேடையில் பேசவேண்டிய சந்தர்ப்பம் கிடைக்கும்போது மறுக்காது ஏற்றுக் கொள்ளுங்கள். பேச்சைத் தயார் செய்யுங்கள். அதனைத் தாளில் அச்சாக்கியோ அல்லது எழுதியோ வைத்துக்கொள்ளும்போது ஒவ்வொரு நான்கு வரிகளையும் வேறு நிறங்களில் வைத்துக் கொள்ளுங்கள். அந்தத் தாளை மேடையில் வைத்து உரையாற்றும்போது ஒரு நீர்ப் போத்தலையும் கூடவே வைத்திருங்கள். அவ்வப்போது நீரை அருந்தும் இடைவெளியில் சிந்தனைகளைக் கோர்ப்பதற்கான சந்தரப்பமாக ஆக்கிக் கொள்ளலாம். பேச்சாளர் தயார்.


3.  சிந்தாமல் சிதறாமல் மையைச் சேமிக்க. 

கணினியில்  Printout எடுக்கும்போது எழுத்துக்களின் நிறத்தை கறுப்பாக அல்லாது சாம்பல் நிறத்தில் (Grey) மாற்றுங்கள். இது மையைச் சேமிப்பதோடு வேகமாகவும் அச்சாகிறது.



4. மருந்து எடுப்பது மறந்து போகிறதா

தினமும் மருந்து எடுக்கவேண்டியவர்கள் எதிர்நோக்கும் பெரும் பிரச்சனையே இன்றைய மருந்தைக் குடித்தேனா இல்லையா என்பதுதான்.
குளிகைக் குப்பியை ஒரு முறை பயன் படுத்தியபின் தலைகீழாக வையுங்கள். மறுமுறை பயன்படுத்தும்போது நேராக வையுங்கள். இது இலகுவானதாகவும் மறக்க முடியாததுமான பயிற்சியாக அமையும்.



5. தூக்கமின்மையா?

மூச்சை நான்கு செக்கன்களுக்கு உள்ளே இழுத்துக் கொண்டு 7 செக்கன்கள் வைத்திருங்கள் பின்பு வாய் வழியாக 8 செக்கன்களுக்கு வெளிவிடுங்கள்.

இந்தப் பயிற்சி மூலம் 1 நிமிடத்தினுள் தூக்கம் உங்களைத் தழுவுமாம்.


No comments:

Post a Comment

கருத்துக்கள்..