Subscribe:

வெள்ளை முட்டைக்கும் மண்ணிற (Brown Egg) முட்டைக்கும் என்ன வித்தியாசம்?

முட்டை வாங்கக் கடைக்குப் போகும்போது எல்லோருக்கும் வருகின்ற குழப்பம் எந்த நிற முட்டை நல்லது? என்று.

 மண்ணிற (Brown) முட்டை அதிக சத்துக் கொண்டது என்றும் வெள்ளை முட்டை சுவையானது என்றும் சிலர் நம்புகிறார்கள்.

ஆக ஆரோக்கியமான உணவு என்றால் அது மண்ணிற முட்டை என்றே முடிவாகிறது. அத்தோடு அதிக விலைக்கும் அது விற்கப்படுகிறது.

உண்மையில் இரு வகை முட்டைகளும் சம அளவான சத்துக்கள் கொண்டதாகவே உள்ளன.

முட்டை ஓடு மட்டுமே வேறு நிறமாக இருக்கும்.

எதனால் இந்த நிறமாற்றம் என்றால் முட்டையை இடும் கோழிகளின் செவியின் நிறமே முட்டையின் நிறத்தைத் தீர்மானிக்கிறதாம்.

வெள்ளைச் செவி கொண்ட கோழி இடுவது வெள்ளை முட்டையாகவும், மண்ணிற செவி கொண்ட கோழி  மண்ணிற முட்டையாகவும் இடுகிறது.





ஆனாலும் ஏன் விலையில் வித்தியாசம் ஏற்படுகிறது என்று நீங்கள் நினைத்ததுண்டா?



பொதுவாக மண்ணிற செவி கொண்ட கோழிகள் அளவில் பெரியதாக இருப்பதால் அவற்றைப் பராமரிக்க அதிகம் செலவாகிறது.
எனவேதான் அவற்றின் முட்டைகளும் அதிக விலைக்கு விற்கப்படுகிறது.





No comments:

Post a Comment

கருத்துக்கள்..