Subscribe:

கோவிட் தொற்றை மறைக்க மனைவியாக மாறுவேடம் போட்டவர் கைது.



இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒருவர் கோவிட்  தொற்றை மறைத்துப் பயணம் செய்ய புதிய வழியத் தெரிவு செய்துள்ளார்.  தொற்றுக்குள்ளான நிலையில் வீட்டில் தனிமைப்படுத்தப் பட்டிருந்த ஒருவர் மாறுவேடத்தில் பயணம் மேற்கொண்டு தற்போது விசாரணைகளை எதிர் கொள்கிறார். 


 ஈத் விடுமுறையில் பயணம் மேற்கொள்ளவேண்டும் என்பதற்காகத் தனது  மனைவியின் கடவுச் சீட்டைப் பயன்படுத்திப்  பயணித்ததோடு முகம் மற்றும் உடலை மூடும்  புர்கா அணிந்து விமான நிலைய அதிகாரிகளை ஏமாற்றி விமானத்தினுள் சென்றிருக்கிறார். அத்துடன் கோவிட் தொற்று இல்லை என்பதைக் காண்பிக்கும் வகையில் தனது மனைவியின் சான்றிதழையும் அவர் பயன்படுத்தியுள்ளார். 



விமானத்தின் உள்ளே சென்ற அவர் பின்னர் வேறு உடைக்கு மாறியதை அவதானித்த பணிப்பெண் இது பற்றி முறையிட்ட  பின்பே அவர் கண்டு பிடிக்கப்பட்டுக் கைதாகினர். 


தடுப்பூசி  செலுத்தப்பட்ட ஆவணம் உட்பட அவர் கொண்டு சென்ற ஆவணங்கள் அத்தனையும் மனைவியுடையது என்று  காவல்துறைத் தலைமை அதிகாரி Aditya Laksimada கூறினார். தற்போது அவர் வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் நடத்தப்படுவதாக அதிகாரிகள் கூறுகிறனர்.


இந்தோனேசியாவில் ஒரு நாளில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றுகள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்  தக்கது. 

No comments:

Post a Comment

கருத்துக்கள்..