எல்லாச் செல்வந்தர்களும் இன்னும் இன்னும் பணம் சேர்ப்பதிலேயே குறியாக இருப்பார்கள். பணத்திற்காக எந்த எல்லைக்கும் செல்ல அவர்கள் தயங்குவதும் இல்லை.
ஆனால் தன்னுடைய பணக்கார வாழ்க்கையைத் துறந்த ஒரு முன்னாள் செல்வந்தர் பற்றிச் செய்தி வெளியாகி இருக்கிறது.
இவர் 49 வயதான Karl Rabeder எனும் செல்வந்தர். Telf, Australia வைச் சேர்ந்தவர்.
பணம் போதும்போதும் என்ற அளவில் இருந்தாலும் அவருக்கு மன நிறைவு இருக்கவில்லை.
தனது தனிப்பட்ட விமானம், வியாபாரம், வீடு, கார்கள் போன்ற எல்லாவற்றையும் விற்ற பணத்தை (நான்கு மில்லியன் டொலர்களை) மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் உள்ள ஏழை மக்களுக்கு கடன் வழங்கும் தொண்டு நிறுவனத்திற்குக் கொடுத்துள்ளார். அந்நிறுவனம் வங்கிக் கடன் பெற முடியாது தவிக்கும் ஏழைகளுக்கு நீண்டகால அடிப்படையில் கடன் வழங்குகிறது. (இன் நிறுவனத் தாபகர் இவரே என்பது குறிப்பிடத் தக்கது)
இப்போது இந்த முன்னாள் பணக்காரர் 1,500$ வாடகை வீட்டில் தங்கி இருக்கிறார்.
தன்னுடைய பழைய நண்பர்களைத் தற்போது சந்தித்துக் கொண்டிருக்கும் இவர் ஒரு புதிய வீடு வாங்கும் முயற்சியில் ஈடு பட்டிருக்கிறார்.
தூய காற்றும், புத்தம் புதுக் காலைச் சூரியனுமே உண்மையான சந்தோசத்தைக் கொடுப்பவை என்று கூறும் இவர், பணத்தைத் தேடி ஓடுபவர்களுக்கு என்ன சொல்கிறார் தெரியுமா? உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருபவை எவை என்றும் அவற்றுக்கு நீங்கள் செலவு செய்யும் தொகை எவளவு என்றும் எழுதிப் பாருங்கள் அப்போது உண்மையான மகிழ்ச்சி எது என்று தெரியும் என்கிறார்.
இப்படியும் மனிதர்கள்...
ஆனால் தன்னுடைய பணக்கார வாழ்க்கையைத் துறந்த ஒரு முன்னாள் செல்வந்தர் பற்றிச் செய்தி வெளியாகி இருக்கிறது.
இவர் 49 வயதான Karl Rabeder எனும் செல்வந்தர். Telf, Australia வைச் சேர்ந்தவர்.
பணம் போதும்போதும் என்ற அளவில் இருந்தாலும் அவருக்கு மன நிறைவு இருக்கவில்லை.
தனது தனிப்பட்ட விமானம், வியாபாரம், வீடு, கார்கள் போன்ற எல்லாவற்றையும் விற்ற பணத்தை (நான்கு மில்லியன் டொலர்களை) மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் உள்ள ஏழை மக்களுக்கு கடன் வழங்கும் தொண்டு நிறுவனத்திற்குக் கொடுத்துள்ளார். அந்நிறுவனம் வங்கிக் கடன் பெற முடியாது தவிக்கும் ஏழைகளுக்கு நீண்டகால அடிப்படையில் கடன் வழங்குகிறது. (இன் நிறுவனத் தாபகர் இவரே என்பது குறிப்பிடத் தக்கது)
இப்போது இந்த முன்னாள் பணக்காரர் 1,500$ வாடகை வீட்டில் தங்கி இருக்கிறார்.

தூய காற்றும், புத்தம் புதுக் காலைச் சூரியனுமே உண்மையான சந்தோசத்தைக் கொடுப்பவை என்று கூறும் இவர், பணத்தைத் தேடி ஓடுபவர்களுக்கு என்ன சொல்கிறார் தெரியுமா? உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருபவை எவை என்றும் அவற்றுக்கு நீங்கள் செலவு செய்யும் தொகை எவளவு என்றும் எழுதிப் பாருங்கள் அப்போது உண்மையான மகிழ்ச்சி எது என்று தெரியும் என்கிறார்.
இப்படியும் மனிதர்கள்...
0 comments:
Post a Comment
கருத்துக்கள்..