எலன் மஸ்க்
உலகத்தில் எல்லாவற்றையும் மாற்ற நினைக்கும் மனிதர்.
மின்சாரத்திலியங்கும் கார்களைத் தயாரித்தவர். விண்வெளிக்கு ரொக்கட் செலுத்தியவர். செலுத்தியதை மீண்டும் பக்குவமாகத் தரையில் இறக்கிக் காட்டியவர். ஆயிரக் கணக்கில் செய்மதிகளை விண்ணுக்கு அனுப்பி உலகம் முழுவதும் இணைய இணைப்பை வழங்க ஆரம்பித்தவர். போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஹைப்பர் லூப் திட்டம் வைத்திருப்பவர். சுரங்கம் அமைத்துப் பாதைகளை அமைப்பவர். செவ்வாயில் மனிதர்களைக் குடியேற்ற நினைப்பவர். இப்போது மனித மனங்களை அறிய நினைக்கிறார்.அவருடைய திட்டங்களில் ஒன்றான நியூர லிங்க் Neuralink
திட்டம் இப்போது பரபரப்பாகப் பேசப் படுகிறது.
திட்டம் இதுதான்
மண்டையைத் திறந்து உள்ளே ஒரு கம்ப்யூட்டர் வைத்துத் தைக்கப்படும்.
மூளை நினைப்பது வெளியில் உள்ள கம்ப்யூட்டர் இற்கு வரும்.
இது வெறும் எண்ணக்கருவாக மட்டும் இருப்பதல்ல. நடைமுறையிலும் வந்துவிட்டது. இந்த வாரம் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்றில் ஒரு குரங்கு pong விளையாடுகிறது. அதனுள் பொருத்தப்பட்டுள்ள கருவி விளையாட்டைத் தொடர்ந்து விளையாடுகிறது.
முதலில் ஒரு joystick இல் குரங்கு விளையாடாத் தொடங்குகிறது. அதற்குப் பரிசாக வாழைப் பழக் கூழ் வழங்கப் படுகிறது.
பின்னர் அந்த joystick இணைப்புத் துண்டிக்கப்பட்ட குரங்கின் மூளையிலிருந்து வரும் சமிக்ஞைகள் விளையாட்டைத் தொடரச் செய்கின்றன.
இது போன்று எதிர்காலத்தில் மனிதர்களுக்குப் பொருத்தப்படும் கருவிகள் மூலம் இயங்க முடியா நிலையில் உள்ளவர்களையும் இயங்க வைக்க முடியும் என்று நம்புகிறார் எலன் மஸ்க்.
நினைவு ஒன்று மட்டுமே போதும் உங்களுக்கு வேண்டிய செயல்களைச் செய்ய வேண்டிய கருவிகள் கொண்டு அவற்றைச் செய்து முடிக்கலாம்.
இதற்காக மூளையின் மேற்புறப் படையில் சிறிய பகுதி வெட்டப்பட்டு ஒரு chip வைக்கப்படும். அது மூளைக்குள் நடக்கும் சிந்தனையாற்றலின் மின் தூண்டல்களைக் கிரகித்து Bluetooth வழியே வெளியே அனுப்பும். அனுப்பப்படும் தகவல்களைக் கொண்டு கணனிகள் மூலம் செயல்கள் நடைபெறும்.
எதிர்காலத்தில் Bluetooth இற்குப் பதிலாக வேறு வகை சமிஞைகளைப் பயன்படுத்தலாமா என்று ஆராயப்படும். அத்துடன் உள்ளே பொருத்தப்பட்ட கணினிக்கு மின்சாரம் Bluetooth வழியே அனுப்பப்பட்டு மின்னேற்றப்படும். எதிர்காலத்தில் இரண்டு மனிதர்கள் வாய் மொழியாகப் பேசாமலே மனதில் நினைப்பதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியும்.
அத்துடன் மூலையில் பொருத்தப்பட்டுள்ள கணினி மூலையில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற பல செய்திகளையும் பரிமாறுவதால் மாரடைப்பு மற்றும் பல நோய் அறிகுறிகளை முன்கூட்டியே எச்சரிக்கை மூலம் அறிந்துகொள்ளலாம்.
அது மட்டுமே நினைவுகளை தரவேற்றி மீண்டும் தரவிறக்கம் செய்யும் வசதியும் இதன் மூலம் கிடைக்கப் போகிறது. அது இயந்திரத்திற்காகவும் இருக்கலாம் மூளைக்காகவும் இருக்கலாம்.
மண்டை ஓடு திறக்கப்பட்ட யாரும் நீண்ட நாள் வாழ்ந்தது இல்லை, மேலும் புளுடூத் (HeadPhone) அலைகள் காதுகளையே கூட பாதிக்கிறது தலைவலியும் வருகிறது! அதை நிரந்தரமாக மூளையில் வைத்தால்..
ReplyDeleteஅதன் விளைவுகளை சொல்லவே வேண்டாம்..!