பரீட்சை என்றாலே மாணவர்களுக்குக் கண்ணைக் கட்டும். எட்டிப் பார்த்து எழுதலாம் என்ற எதிர் பார்ப்பிலேயே பரீட்சைக்குச் செல்லும் மாணவர்கள் ஏராளம். இதற்கு ஆப்பு வைக்க சீனாவின் ஒரு பாடசாலை தனது மாணவர்களை வெட்ட வெளியில் பரீட்சை எழுத வைத்திருக்கிறது.
ஒரு பெரிய மைதானத்தில் மாணவர்களை அதிக இடைவெளியில் அமர வைத்து பரீட்சை எழுத வைத்து அதனை உயரமான இடத்திலிருந்து அவதானித்து இருக்கிறார்கள். இதனால் எட்டிப் பார்த்து எழுத நினைத்தவர்களின் கொட்டம் அடக்கப்பட்டு மண் போடப்பட்டுள்ளது :)
இந்தப் புதிய முறையினால் மாணவர்கள் பார்த்து எழுதுவது முற்றிலும் தவிக்கப்பட்டு இருப்பதாக மத்திய சீனாவின் வுஹன் மாகாணப் பாடசாலைத் தலைமை தெரிவித்திருக்கிறது.
சுட்டு எழுத நினைத்த மாணவர்களை வெயில் சுடாதோ?
இந்தப் புதிய முறையினால் மாணவர்கள் பார்த்து எழுதுவது முற்றிலும் தவிக்கப்பட்டு இருப்பதாக மத்திய சீனாவின் வுஹன் மாகாணப் பாடசாலைத் தலைமை தெரிவித்திருக்கிறது.
சுட்டு எழுத நினைத்த மாணவர்களை வெயில் சுடாதோ?
.
No comments:
Post a Comment
கருத்துக்கள்..