இன்றைய புதுமையான அனுபவம் ஒரு வித்தியாசமான பாலம் பற்றிச் சொல்லப் போகிறது.
பொதுவாகவே உலகின் உயரமான பாலம் நீளமான பாலம் என்றெல்லாம் பார்த்திருப்பீர்கள். ஆனால் நீர் மட்டத்தின் கீழாகச் செல்லும் பாலம் பார்த்திருக்கிறீர்கள?
இது நீரை வகிர்ந்து அமைக்கப் பட்டுள்ள பாலம். நீண்ட காலம் தாக்குப் பிடிக்கக் கூடியதும் உறுதி மிக்கதுமான அக்கூயா எனப்படும் மரத்தினால் இந்தப் பாலம் அமைக்கப் பட்டுள்ளது.
நெதர்லாந்தில் Halsteren என்ற இடத்தில் உள்ள நான்கு நூற்றாண்டு பழைமையான பாதுகாப்புக் கோட்டைக்குச் செல்லும் பயணிகளுக்காக அமைக்கப் பட்டுள்ளது.
ஒரு வித்தியாசமான அனுபவப் பயணமாக இது இருக்கும் என்பதில் ஐயமில்லை.
No comments:
Post a Comment
கருத்துக்கள்..