Subscribe:

TD வங்கி வாடிக்கையாளர்களே உங்கள் கவனத்திற்கு.

 கனடாவில் TD வங்கி வாடிக்கையாளர்கள் இலக்குவைக்கப்படும் புதிய வஞ்சித்தல் முயற்சி குறித்த செய்தி வெளியாகியுள்ளது. 

கனடாவின் பல மாகாணங்களிலுள்ள பொதுமக்களின் TD வங்கிக் கணக்கிலிருந்து வஞ்சகமான முறையில் பணம் திருடப்படுவதாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து TD வங்கியும் DOORDASH நிறுவனமும், விசாரணைகள ஆரம்பித்துள்ளன. 

DOORDASH நிறுவனம் உணவு விநியோக நடவடிக்கைகளில் கொடிகட்டிப் பறக்கும் நிலையில் அதன்பேரில் இந்த வஞ்சனை நடைபெற்றுவருகிறது.  இதில் கவனிக்கத்தக்கவேண்டிய விடயம் இதுவரை DOORDASH  சேவைகளைப் பயன்படுத்தாத பலரின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் களவாடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. எனவே உங்கள் வங்கிக் கணக்கில் நடைபெற்றுள்ள பணப் பரிமாற்றங்களை அவதானமாகப் பரிசோதிக்க வேண்டும். குறிப்பாக TD வங்கி கணக்குவைத்திருப்போர் தங்கள் கணக்குகளில் இடம்பற்றுள்ள சந்தேகத்துக்குரிய பண மீளப்பெறல்கள் பற்றி கவனிக்கவேண்டியுள்ளது. 

இதுவரை TD வங்கியோ DOORDASH  நிறுவனமோ இந்தக் குற்றம்  எவ்வாறு நடந்தது என்பது குறித்துக் கருத்து வெளியிடவில்லை. 

இதேநேரம் அமெரிக்காவில் பல்வேறு வங்கிகளின் வாடிக்கையாளர்கள் இதுபோன்ற வஞ்சனைக்கு முகம் கொடுத்துள்ளனர்.  பாதிக்கப்பட்டவர்களுக்கு வங்கியால் பணம் மீளளிக்கப்பட்டுள்ளதாயினும் அதற்குச் சில வாரங்கள் எடுத்ததாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். 

கனடாவில் இதுவரை TD வங்கி வங்கி வாடிக்கையாளர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கனடாவில் TD வங்கி ஒரு கோடியே 35 இலட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கிறது. 

தற்போதுள்ள DEBIT CARD  அட்டைகள் வெறுமனே வங்கி நடவடிக்கைகள் மட்டுமன்றி இணையவழிப் பொருட் கொள்வனவுகளுக்கும் பயன்படுத்த முடியும் என்பதாலேயே இந்தத் திருட்டுக்கு வழியேற்பட்டுள்ளது. 

உங்களது வங்கியால் வழங்கப்படும்  DEBIT CARD அட்டைகள் இணைய வழிப் பொருட்கொள்வனவுக்கு உடன்படவேண்டுமா இல்லையா என்பதை நீங்களே முடிவு செய்யும் வசதிகளை வங்கி வழங்குகிறது. எனவே உங்கள் வங்கிக் கணக்கு வஞ்சகர் வலைக்குள் சிக்காதிருக்க  வங்கியுடன் தொடர்பு கொண்டு உங்கள் விருப்பத்தேர்வை உறுதிப்படுத்தலாம். 







No comments:

Post a Comment

கருத்துக்கள்..