Subscribe:

கனடாவில் அழகிய கஞ்சாக் கடை

 சந்து பொந்துக்குள் நுழைந்து  சென்று மூக்கைப் பொத்தவைக்கும் இடம் ஒன்றில் அறிமுகமில்லாத ஒருவரிடம் பணத்தைக் கொடுத்து அவர் தருவதைப் பெற்றுச் செல்லும் த்ரில் நிறைந்த கஞ்சா வாங்கும் வழக்கம் மலையேறிவருகிறது. 

ஒரு அப்பிள் போன் வாங்குவதுபோல அழகான விற்பனை நிலையத்தில் உத்தரவாதத்துடனும் அரச அங்கீகாரத்துடனும் கஞ்சா வாங்கலாம் கனடாவில். 


கடந்த 2017 ஆம் ஆண்டு கனடாவில் கஞ்சா விற்பதை அனுமதிக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டது. 2018  ஜூன் மாதம் தொடக்கம் கனடாவின் அனைத்துப் பகுதிகளிலும் அனுமதிபெற்ற முகவர்கள் கஞ்சா விற்கமுடியும் என அறிவிக்கப்பட்டது. 








இதனைத் தொடர்ந்து ஆர்வத்துடன் பலர் இந்த விற்பனை நிலையங்களை ஆரம்பிக்க விண்ணப்பித்திருந்தனர். கனடாவின் பிரபலமான வர்த்தகத் தலை நகர் டொரண்டோ அமைந்துள்ள ஒண்டாரியோ மாகாணம் முதற் கட்டமாக குலுக்கல் முறையில் 25 பேரைத் தெரிவு செய்து அவர்கள் கடைகளை ஆரம்பிக்க அனுமதியளித்தது. 


வழங்கப்பட்ட காலக் கெடுவுக்குள் கடைகளை ஆரம்பிக்க முடியாமல் போன வர்த்தகர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது தனிக் கதை.



தற்போதைய காலகட்டத்தில் பெருகிவரும் கஞ்சா விற்பனை நிலையங்கள் மெருகூட்டப்பட்ட வடிவமைப்பில் வாடிக்கையாளரைக் கவரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று டொரண்டோவில் அமைந்துள்ள அழகிய கஞ்சாக் கூடம் இங்கு நீங்கள் படத்தில் காண்பது.


No comments:

Post a Comment

கருத்துக்கள்..