மூளை உண்ணும் அமீபா (Naegleria fowleri ) குறித்த செய்திகளும் அதிகமாக வெளிவர ஆரம்பித்துள்ளன.
இது புதிய செய்தி அல்ல. கடந்த 10 ஆண்டுகளாக இந்த அமீபா குறித்த செய்திகள் இருந்துவந்தாலும் அண்மைக் காலமாக அமெரிக்காவின் மத்திய பகுதிகளில் ஆரம்பித்து தற்போது அமெரிக்காவின் வடக்குப் பகுதிகளில் பரவவும் ஆரம்பித்துள்ளது என்று அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்தார்ட்டிக்காக் கண்டத்தைத் தவிர உலகின் அனைத்துக் கண்டங்களிலும் இந்த அமீபா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது சுயமாக வாழக் கூடிய உயிரினம். நீர் நிலைகள் சுடுநீர் குளங்கள், தொழிற்சாலைக் கழிவு நீர், சுடுநீர் கருவிகள், நீச்சல் குளங்கள் மற்றும் மணல் போன்றவற்றில் அதிகமாக் காணப்படலாம். உலக வெப்ப மயமாதலின் மற்றுமொரு பெரும் பாதிப்பாக இந்த அமீபாப் பரவல் மாறலாம். 46 பாகை செல்சியஸ் வெப்பம்வரையான சூழலில் இது வாழக் கூடியது. இந்த அமீபா அடங்கிய குடிநீரை உட்கொள்வதால் நீங்கள் பாதிக்கப்படப்போவதில்லை ஆனால் அது உங்கள் மூக்கு வழியாகச் சென்றால் மூளைவரை சென்று தாக்கக் கூடியது.
மூளைக் கலங்களை உண்ண ஆரம்பித்து மூளையை வீங்கச் செய்கிறது அதுவே மனிதரைக் கொல்லும் அளவிற்கு மாறுகிறது.
இதனால் நீங்கள் பாதிக்கப்பட்டதாக எப்படி உணர்வது?
அமெரிக்கத் தொற்று நோய்த் தடுப்புப் பிரிவு இந்நோய் அறிகுறிகள் குறித்த வியடங்களை வெளியிட்டுள்ளது.
தொற்று ஏற்பட்டதும்
- தலைச் சுற்று
- காய்ச்சல்
- மயக்கம்
- வாந்தி போன்ற பாதிப்புகள் இருக்கும் .
பாதிப்பு அதிகமாகும்போது
- கழுத்துப் பிடிப்பு
- ஒளிக் கூச்சம்
- தடுமாற்றம்
- மாய நிலைத் தோற்றம்
- வலிப்பு போன்றவை ஏற்படும்.
கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்காவில் 34 தொற்றுகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அமீபாத் தாக்கம் காரணமாக இந்தியாவில் 12 வயதுள்ள சிறுவன் 2020 ஆம் ஆண்டு கொல்லப்பட்டதுடன் கேரளாவைச் சேர்ந்த 10 வயதுச் சிறுவன் கடந்த 2019 ஆம் ஆண்டு கொல்லப்பட்டமையும் குறிப்பிடத் தக்கது.
பொதுமக்கள் நீரைக் கொதிக்கவைத்துக் குடிக்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்மை குறிப்பிடத் தக்கது.
No comments:
Post a Comment
கருத்துக்கள்..