Subscribe:

டொரண்டோ அருகே கிறிஸ்மஸ் அலங்காரங்கள்.

கனடாவின் டொரண்டோ நகர மத்தியிலிருந்து ஒரு மணி நேரப் பயணத்தில் பார்க்கக் கூடிய அற்புதமான கிறிஸ்மஸ் அலங்காரங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்.

Weesh Pacheco என்பவர் தனது வீட்டில் அமைத்துள்ள சிற்றளவான அலங்கார வடிவங்கள் பார்ப்பவர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.  குறிப்பாகச் சிறுவர்கள் விரும்பும் வகையான அலங்காரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

Old Thornhill இல்  John Street  இல் அமைக்கப்பட்டுள்ள இந்த அலங்காரங்களுக்குக் கட்டணம் எதுவும் அறவிடப்படுவதில்லை.  செவி வழியே இதுபற்றி அறிந்தோர் இங்கு கூடுவதால் அந்தப் பகுதி புகழ் பெற்றதனாலோ என்னவோ தனது வீட்டு முகவரியை வெளியிட அவர் விரும்பவில்லை. உங்களுக்காகச் சில வீடியோக் காட்சிகளை இணைத்திருக்கிறோம். பார்த்து மகிழுங்கள். 

No comments:

Post a Comment

கருத்துக்கள்..