Subscribe:

பாலியல் வன்முறைக் குற்றம் சுமத்தப்பட்டு 'ரிஷாட் பதியுதீன்' இன் மைத்துனர் கைது




கடந்த 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் 'ரிஷாட் பதியுதீன்' இன் வசிப்பிடத்தில் பணி  புரிந்த ஒரு பெண் பாலியல் பலாத்காரத்துக்குள்ளானதாக வாக்குமூலம் வழங்கியுள்ளார். 


முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான 'ரிஷாட் பதியுதீன்' இன் இல்லத்தில் பணிபுரிந்துவந்த 16 வயதுச் சிறுமி கிருஷாலினியின் சாவிலுள்ள மர்மம் குறித்துத் தற்போது பெரும் பரபரப்பாகப் பேசப்படுகிறது.  

பல்வேறு தரப்புகளால் கொடுக்கப்படும் அழுத்தங்களுக்கு மத்தியில் இந்தச் சம்பவம் பெரும் கவனம் பெற்றுள்ளது. இலங்கைக்  காவல்துறை இதுவரை 20 வாக்குமூலங்களைப்  பதிவு செய்துள்ளதாக ஊடகப் பேச்சாளர் 'அஜித் ரோஹண'  கூறியுள்ளார். 


அவற்றில் இரண்டு வாக்கு மூலங்கள் 'ரிஷாட் பதியுதீன்' இன் இல்லத்தில் முன்னர் பணியாற்றிய  இரண்டு பெண்களிடம் பெறப்பட்டிருந்தது. இவர்கள் ஷங்கர் என்று அழைக்கப்படும் 'பொன்னையா பண்டாரம்' என்பவரால் முன்னாள் அமைச்சரின் இல்லத்தில் பணியில் சேர்க்கப்பட்டிருந்தனர்.


அதில் தற்போது டயகம என்ற ஊரில் வசித்துவரும் 22 வயதான பெண் அளித்துள்ள வாக்கு மூலத்தில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் இன்  மைதுனரான 44 வயது  'சிஹாப்டீன் இஸ்மதீன்' தன்னை வல்லுறவுக்குட்படுத்தியதாகத் தெரிவித்திருந்தார். இந்தப் புகாரை அடுத்து இஸ்மதீன் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்டதாக இலங்கைக்  காவல் துறை கூறியுள்ளது. 

1 comment:

  1. Most fashionable slot machines are designed to look and feel just like the old mechanical fashions, but they work on a 카지노사이트 totally totally different precept. The consequence of each pull is definitely controlled by a central pc contained in the machine, not by the motion of the reels. The traditional slot machine design works on an elaborate configuration of gears and levers.

    ReplyDelete

கருத்துக்கள்..